“நான் வெற்றிப் பெறுவேன்” - திமுக வேட்பாளர் நம்பிக்கை

55பார்த்தது
விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, “தொகுதி மக்கள் அனைவரும் மறக்காமல் 'ஜனநாயக கடமையாற்றுங்கள். முதலமைச்சரின் சாதனையின் அடிப்படையில் நான் அதிக வாக்குகள் பெற்று வெற்றிப் பெறுவேன்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி