பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 31) டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த செய்தியாளர், “டெல்லிக்கு என்ன திடீர் பயணம்” என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த செய்தியாளரைப் பார்த்த அண்ணாமலை, “ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன்.. நீங்க முயற்சியே செய்ய வேண்டாம்” என கேஷுவலாக பதில் அளித்துவிட்டுச் சென்றார்.