இந்தியரை பெருமைப்பட வைப்பேன் - கவுதம் கம்பீர்

72பார்த்தது
இந்தியரை பெருமைப்பட வைப்பேன் - கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கவுதம் கம்பீர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், "இந்தியா எனது அடையாளம், என் நாட்டிற்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய பாக்கியம். வேறு தொப்பி அணிந்திருந்தாலும் மீண்டும் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவையும் நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி