தமிழ்நாட்டு மக்களை காக்க உங்களில் ஒருவனாக முன்னின்று முன்களப் பீரனாக முன்னே செல்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இபிஎஸ், "அறியாமை இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை. நான் கட்சியின் பொதுச் செயலாளர்தான். தொண்டர்களுடன் இருக்கும் தலைமைச் சேவகன்தான். இப்பயணத்தில் எனது இதயம், எண்ணத்தோடு இணைந்து பயணிக்க அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.