தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று.! ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதுபோல, ராஜா இசையின்றி தமிழர்களின் ஒரு நாளும் நகராது. இளையராஜாவின் உண்மையான பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி. ஆனால், அன்று கருணாநிதி பிறந்த நாள் என்பதால் அவரை மதிக்கும் விதமாக தனது பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுவதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தார்.