நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், இந்திய வீரர் குகேஷிடம் தோல்வி அடைந்த உடன் விரக்தியில் டேபிளை தட்டினார். இந்நிலையில், அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய குகேஷ், "மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் டேபிளை தட்டியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் பலமுறை இதுபோல் நடந்து கொண்ட தருணங்களை கடந்து வந்துள்ளேன். அவர் செய்ததில் நான் கவனம் செலுத்தவில்லை" என கூறியுள்ளார்.