தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் எனக்கும் கிடைத்து வரும் மக்கள் ஆதரவை நாடே பார்க்கிறது என சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், கோவையில் நேற்று மக்கள் கடலில் நீந்திக்கொண்டே பயணம் செய்தேன். பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துபோய்விட்டது என அவர் கூறியுள்ளார். மேலும் பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும் என மோடி கூறியுள்ளார்.