அண்ணா பல்கலைக்கழக மாணவர் சங்க போராட்டத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "இந்த நேரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறேன். நம் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும், இது போன்ற தவறு செய்தவர்களை வெளியே நடமாட விடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.