‘எனக்கும் ஜெயக்குமார் இறப்புக்கும் சம்பந்தம் இல்லை’ - ஆனந்த ராஜா

18839பார்த்தது
‘எனக்கும் ஜெயக்குமார் இறப்புக்கும் சம்பந்தம் இல்லை’ - ஆனந்த ராஜா
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், "ஜெயக்குமார் மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் ரூ.200 கோடி சொத்து உள்ளது. ரூ.30 லட்சத்திற்காக கொலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது” என ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முதல் நபரான ஆனந்த ராஜா விளக்கம் அளித்துள்ளார்.