தமிழ்நாடு அரசு ‘₹' குறியீட்டை பயன்படுத்தாதது தொடர்பாக எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை என இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "தற்போதைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஏதாவது காரணம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.