'சலார்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது என அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், 'KGF-2' மாபெரும் வெற்றியால் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேனோ என்றும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தின் மூலம் 'சலார் 2' எனது சிறந்த படமாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.