"இதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை” - ராகுல் காந்தி

76பார்த்தது
"இதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை” - ராகுல் காந்தி
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார். வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை” என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி