குபேரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், “நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதுவும் இல்லை. ஒரு செங்கலை கூட அசைக்க முடியாது. என் ரசிகர்கள் இருக்காங்க. என்னை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது நெகட்டிவிட்டி பரப்புங்கள். எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருட்டில் தீபந்தம் மாதிரி என்னை அழைச்சிட்டு போவாங்க. அவங்க என் வழி துணை” என்றார்.