IPL 2025 ஃபைனலில் PBKS தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக நேஹல் வதேரா கூறியுள்ளார். சீசனின் தொடக்கத்தில் பேட்டிங் வேகத்தை அதிகரித்த தான், இறுதிப் போட்டியில் அதேபோன்று சிறப்பாக ஆடியிருந்தால் பஞ்சாப் அணி வென்றிருக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். RCB உடனான ஃபைனலில் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் க்ருனால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.