இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை வெளியட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார் தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை; நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதுதான் எனக்கு கிடைத்த பெருமை” என்றார்.