பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொல்லைபுறமாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய இபிஎஸ், “எவ்வளவு தூரம் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவு தூரம் அதிமுக வளரும். 200 இடங்களில் திமுக வெற்றி என்பது பகல் கனவு. நானும் இறுமாப்புடன் சொல்கிறேன், அதிமுக தான் வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.