மரணப் படுக்கையிலும் உதவி செய்த ஹூசைனி

53பார்த்தது
மரணப் படுக்கையிலும் கராத்தே வீரரும், நடிகருமான ஹூசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு நன்கொடை அளித்துள்ள சம்பவம் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் பாலாஜி அனுப்பிய உடல் நன்கொடைக்கான ஒப்புதல் படிவத்தில் ஹூசைனி கடந்த 21ஆம் தேதி கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 24) நள்ளிரவில் ஹூசைனி காலமானார்.
முன்னதாக தன் இதயத்தை மட்டும் தனது வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி