அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவியுடன் சண்டை போட்டதால் கணவர் ஜோ என்பவர் வீட்டிற்குச் செல்ல பயந்துள்ளார். இதனால், டேவன்போர்ட் என்ற இடத்தில் உள்ள முன்பின் தெரியாதவரின் வீட்டிற்குள் நுழைந்த அவர் அங்கேயே தங்கி சமைத்து, சாப்பிட்டு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் இதை பயன்படுத்துக் கொண்டார். இதனை பார்த்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.