நிறம் குறித்து கேலி செய்த கணவன்.. மனைவி தற்கொலை

73பார்த்தது
நிறம் குறித்து கேலி செய்த கணவன்.. மனைவி தற்கொலை
கேரளா மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த அப்துல் வாஹிதுக்கும், ஷஹானா மும்தாஜ் (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 22 நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்த வாஹித், அபுதாபிக்கு சென்றுள்ளார். இதனிடையே ஷஹானாவின் நிறம், ஆங்கிலம் பேசத்தெரியாதது ஆகியவற்றை குறிப்பிட்டு வாஹிதும் அவரது தாயாரும் அவமானப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஷஹானா கடந்த 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அபுதாபியில் இருந்து வந்த வாஹிதை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி