உ.பி: மச்சினிச்சியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கித் குமார் - கிரண் தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த மார்ச்.8-ம் தேதி கிரண் கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அங்கித் தனது நண்பன் சச்சினை வைத்து கிரணை கார் ஏற்றிக் கொன்றுள்ளார். கிரணின் தங்கையை திருமணம் செய்ய விரும்பியதால் மனைவியை கொன்றதாக அங்கித் வாக்குமூலம் அளித்துள்ளார்.