உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். பின்னர் அவரது கழுத்திலும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டுக்குச் சென்ற கணவர், மனைவியிடம் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், மனைவி மறுத்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் இதனை செய்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.