கேரளா: இடுக்கியை சேர்ந்த தம்பதி ரகு - மினி (39). இருவருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை (மே. 30) சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரகு, மினி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் 90% தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த மினி சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன். 01) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரகுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.