தெலங்கானா மாநிலம் ரஹமத்நகர் அருகே சொல்லாமல் தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை போதையில் இருந்த கணவர் கொலை செய்துள்ளார். நரசிம்ஹா என்ற கூலித் தொழிலாளிக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக சோனி (26) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சம்பவத்தன்று, வீட்டிற்கு போதையில் வந்த நரசிம்ஹா, தன்னிடம் சொல்லாமல் ஏன் தாய் வீட்டிற்குச் சென்றாய்? என கேட்டு சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கணவரை கைது செய்தனர்.