மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான். சூரியன் எப்படி நிரந்தரமானதோ அதேபோல் திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ அதேபோல் திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்.