அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனை, மாணவி புகார் அளித்த இரவே போலீசார் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், அன்றைய தினமே ஞானசேகரன் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், தனக்கு எதுவும் தெரியாது என கூறியதால் அவரை அனுப்பி வைத்துள்ளனர். CCTV, செல்போன் சிக்னலை வைத்து ஞானசேகரன் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர்.