கேரளா தேங்காய் சம்மந்தி எப்படி செய்வது?

76பார்த்தது
கேரளா தேங்காய் சம்மந்தி எப்படி செய்வது?
தேங்காய் சம்மந்தி கேரளாவில் மிகவும் பிரபலமானது. வீட்டிலேயே சுவையான கேரளா தேங்காய் சம்மந்தி செய்யலாம். முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். அதனை நன்கு கலந்து உருட்டி வைத்தால் கேரளா சம்மந்தி தயாராகிவிடும். இதனை சுடு சாதத்தில் பிணைந்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி