நெற்பயிர்கள் வளரும் வரை வரப்புகளில் புற்கள் எதுவும் அண்டாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலத்தின் போது பயிர்களுக்கு தண்ணீர் தேவை குறைவாக இருக்கும். அப்போது தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக தண்ணீரின் காரணமாக பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும். எனவே சரியான அளவில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமானது. பயிர்களில் அதிகமான உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து குறிப்பிட்ட வகை உரங்களை தகுந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.