கலப்பட பாலை வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம். கொதிக்க வைத்து ஆற வைத்த பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு சொட்டு அயோடின் கரைசலை சேர்க்கவும். பால் தூய்மையாக இருந்தால் அதன் நிறம் மாறாமல் இருக்கும் அல்லது சற்று மஞ்சள் நிறமாக மாறும். அதுவே கலப்படப் பாலாக இருந்தால் அது நீல நிறமாக மாறும். பாலை நன்றாக குலுக்கும் பொழுது நுரை உருவாக்கவில்லை என்றால் பால் தூய்மையானது. நுரை உருவாகினால் அதில் சோப்பு கலக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.