மனிதர்கள் ஒரு சிகரெட்டை புகைக்கும் பொழுது தங்களது வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பவர்கள் கிட்டத்தட்ட வாழ்நாளில் 7 மணி நேரத்தை இழக்கின்றனர். ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களையும், பெண்கள் 22 நிமிடங்களையும் இழக்கின்றனர். புற்றுநோயால் இறப்பவர்களில் அதிகமானவர்கள் சிகரெட் பழக்கத்தால் இறந்தவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.