குழுவாக வாழும் குணம் கொண்டவை எறும்புகள். ஒவ்வொரு குழுவிலும் இனப் பெருக்கத் திறன்கொண்ட
ஒன்று அல்லது சில பெண் எறும்புகளும், சோம்பேறி எனப்படும் ஆண் எறும்புகளும் இருக்கும். எறும்புக்கு மொத்தம் ஆறு கால்கள். தென்பனிமுனைப் பகுதிகளில் எறும்புகள் வசிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல காற்று, மின்சாரம், அதிர்வு, வேதிப்பொருட்கள் ஆகியவற்றை உணரும் உறுப்பு எறும்புகளுக்கு உள்ளது. அரசி எறும்பு 30 வருடம் வரையும், வேலையாட்கள் எறும்பு 3 வருடம் வரையும், ஆண் எறும்புகள் சில மாதங்கள் வரையும் தான் உயிர் வாழ்கின்றன.