இளநீர் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் அதில் உள்ளன. அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் ஆய்வின்படி, தேங்காயில் உள்ள நீர் ஒரு வடிகட்டப்பட்ட திரவமாகும். மரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு மூலம், நீர் வேர்களில் இருந்து தேங்காய்க்குச் செல்கிறது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மரத்தில் உள்ள xylem நாளங்கள் நீர் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.