90-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவருக்கு வாய்ப்புகள் குறைந்தபொழுது பாஜகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 2004-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது ஏற்பட்ட விமான விபத்தில் அவரும், அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மரணம் இயற்கையானது இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.