விமானம் கீழே விழுந்தபோது Emergency Exit திறந்ததால் வெளியே குதித்து தப்பிவிட்டேன் என விமான விபத்தில் உயிர்தப்பிய இளைஞர் பிரதமரிடம் கூறியுள்ளார். குஜராத் விமான விபத்தில் உயிருடன் தப்பிய இளைஞர் விஸ்வாஷ் தான் தப்பிய நிகழ்வு குறித்து பிரதமரிடம் விவரித்தார். அப்போது அவர் கூறுகையில், "விமானம் விழுந்ததும் எனது இருக்கை தனியே கழன்று விழுந்ததால், நொடியில் குதித்து தப்பினேன். நான் உதவி கேட்டபோது என்னை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அது நினைவில் உள்ளது" என தெரிவித்தார்.