அரியவகை கடல்வாழ் உயிரினங்களான ஆமைகள் தினத்தில் ஆமைகளைப்போல நாமும் உடை அணிந்து அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வாக ஏற்படுத்தலாம். ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு உதவி செய்யலாம். மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆமைகளை அரசின் விதிப்படி தத்தெடுக்கலாம். ஆமைகள் கடல் நீரை சுத்தம் செய்து உலக நன்மைக்காக பாடுபடுவதை எடுத்துரைக்கலாம். ஆமை குறித்த கல்வி அறிவு வழங்குதலை உறுதி செய்யலாம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கையை பாதுகாக்க உறுதி எடுக்கலாம்.