இரவு நேரங்களில் சாலையிலும், மின்கம்பத்தில் சுற்றித்திரியும் வௌவால் தனது இரையை வேட்டையாடும்போது எக்கோலொகேஷன் எனப்படும் மீயொலி செயல்முறையை கடைபிடிக்கிறது. இதனால் அவைகளுக்கு பார்வை இல்லாதது போல் அங்கும்-இங்கும் ஓடினாலும் எக்கோவை உடனுக்குடன் அனுப்பி எதிரில் வரும் பொருட்களை அடையாளம் கண்டு விலகிக்கொள்ளும். பாலூட்டிகள் போன்ற உயிரினங்களைப்போல வௌவால்களுக்கும் கண்கள் இருக்கின்றன. பகல் வேளைகளில் இவை பெரும்பாலும் ஓய்வெடுக்கும் எனபதால் பகலில் அதன் கண்களைக் காண்பது அரிது.