மதுரை: மேலூரை சேர்ந்த 19 வயது இளம்பெண், தீபன்ராஜ் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியுடன் தீபன்ராஜ் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது தீபன்ராஜின் நண்பர்களான சுகுமாரன் (24), மதன் (25) ஆகியோர் அங்கு வந்துள்ளனர். இருவரும் தீபன்ராஜ் அனுமதியுடன், இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், தீபன்ராஜ் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.