மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-கல்வன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர். கோலாப்பூர் சந்திப்பில் இந்த பயங்கர விபத்து நடந்தது. திருமணம் ஒன்றிற்கு சென்று விட்டு குடும்பத்தினர் நாசிக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். ஜூன் 4ஆம் தேதி இரவு 10 மணியளவில் கார் விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.