பின்னணி பாடகர் மனோவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

851பார்த்தது
பின்னணி பாடகர் மனோவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
பிரபல பின்னணி பாடகர் மனோ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா உள்ளிட்ட 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முடித்ததற்காகவும், இந்திய இசைத்துறையில் 38 ஆண்டுகள் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :