திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கரும், கெளசல்யாவும் கடந்த 2016ல் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். தாக்குதலில் கெளசல்யா உயிர் பிழைத்தார். அவர் தற்போது அளித்த பேட்டியில், "தற்போது வரை தமிழ்நாட்டில் பல ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆளுங்கட்சியான பின் அப்படி இருக்கவில்லை” என்றார்.