’ஹோண்டா’ நிறுவனம் எக்ஸ் ஏ.டி.வி. மேக்சி ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 754 சி.சி. என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 58.6 எச்.பி. பவரையும், 69 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரின் டிரங்க் பகுதியில் 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்களை கொண்டு செல்லலாம். ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் ஸ்கூட்டர் என்பதால் ரூ.11.9 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.