ஜார்ஜியா: அட்லாண்டாவின் புறநகர் பகுதியில் தங்களின் 9 மற்றும் 11 வயது வளர்ப்பு மகன்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓரினச்சேர்க்கை (தந்தைகள்) தம்பதியினரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவருக்கும் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் மூலம் சிறுவர்களை தத்தெடுத்த இந்த இருவரும் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் அதனை வீடியோ எடுத்து வைத்ததும் தெரியவந்துள்ளது.