பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

2265பார்த்தது
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நாளையும் மழை தொடரும் என்பதால் நெல்லை. தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.