ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் 53 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (பிப். 04) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளைய (பிப். 05) தினம் பொது விடுமுறை தினமாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.