கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அரசு விடுமுறையாகும். அதற்கு அடுத்தநாள் ஞாயிறு, ஜூன் 9-ம் தேதி வைகாசி விசாகத்தையொட்டி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.