ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வண்ணங்களில் லீட் ஆக்சைடு, செப்பு சல்பேட், அலுமினிய புரோமைடு, பிரஷ்யன் நீலம், பாதரச சல்பைடு, குரோமியம் அயோடைடு போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனங்கள் சிறுநீரக நோய், கண்களில் எரிச்சல் மற்றும் வீக்கம், புற்றுநோய், குருட்டுத்தன்மை, தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால், இயற்கை வண்ணங்களை பயன்படுத்துவதே சிறந்தது.