உலக ரத்த தான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் கொண்டாடப்பட்டது. பின்னர், 2005ஆம் ஆண்டு 58ஆவது உலக சுகாதார சபை கூட்டத்தின் போது உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இந்த தினத்தை கடைபிடிக்க முடிவெடுத்தன. அப்போது முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த தான தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை இந்த நாள் ஊக்குவிக்கிறது.