ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் சாம்பியன் பட்டத்தை RCB அணி தட்டிச்சென்றுள்ளது. இந்நிலையில், RCB அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற RCB அணிக்கு வாழ்த்துகள். RCB அணியின் இந்த வெற்றி, விராட் கோலியின் 18 ஆண்டுகால தவம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இது சரித்திரம் படைத்த நாள். இறுதியாக, இந்த முறை கோப்பை நம்முடையது” என்றார்.