SRH அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது LSG அணி. டாஸ் வென்ற SRH பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த LSG அணி பேட்டர்கள் SRH அணியின் பௌலிங்கை துவம்சம் செய்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்ஷெல் மார்ஷ் 65, எய்டன் மார்க்ரம் 61 மற்றும் நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் குவித்தனர். SRH தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.