RCB அணிக்கு 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது SRH அணி. டாஸ் வென்ற RCB அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த SRH அணி பேட்டர்கள் RCB-யின் பௌலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94, அபிஷேக் சர்மா 34 ரன்களும் குவித்தனர். RCB தரப்பில் ரோமாரியோ ஷெபர்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.