கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலியில் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க தவறிய அம்மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.